|
Post by Admin on Jan 14, 2014 0:03:02 GMT 5.5
உண்மை தானே.. நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் பார்க்கப் பார்க்கப் புதுப்புதுப் பொருள் தரும் இலக்கியங்கள் அல்லவா.. ஊன் மறப்போம் உணவும் மறுப்போம் உறக்கம் தொலைப்போம் உன்னைத் தவிர சிந்தையில் வேறறியோம்.. அதற்கென இங்கே நேரம் ஒதுக்கி அதைக் காணத் தவமாய்த் தவமிருந்து ஷேக்ஸ்பியர், ஷெர்லக் சாக்ரடீஸ் சீஸரும் பரதனும் ராமனும் பஷீரும் என்று நீ எடுத்த அவதாரங்கள் பூசிய அரிதாரங்கள் அகமும் புறமும் வெண்பாக் குறட்பா எல்லாம் அறிந்து ஏற்றம் அடைந்து உலகில் உள்ள இலக்கியம் யாவும் உன் இதழ் மொழியில் உன்னதம் அடைய உன் நிழற்படங்கள் ஒவ்வொரு முறையும் காண்க் காண காட்சிகள் நூறு ஆயுள் நூறு ஆயினும் நாங்கள் நிழற்படம் பார்ப்போம் நித்திரையைத் தொலைப்போம் நீங்களும் சேர்ந்து ஐக்கியமாகி நித்திரையைத் தொலைக்க ஓடி வருகவே..
|
|